எகிப்தில் கிறிஸ்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு : ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு
காப்டிக் எனப்படும் பழைமைவாத கிறிஸ்தவர்கள் எகிப்து உள்ளிட்ட சில நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எகிப்து நாட்டில் மிக அதிகமாக உள்ளனர்.
எகிப்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் நேற்று காப்டிக் கிறிஸ்தவர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தின் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர் என எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், எகிப்து நாட்டில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்று உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply