சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இம்ரான்கான் சந்திப்பு
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக தேர்வானவர் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான். இவர் அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை பெய்ஜிங் சென்றடைந்த இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் உதவும். இதன்மூலம் இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்
பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கானின் இந்த சீனப் பயணம் அவரது முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply