பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது : இலங்கை சபாநாயகர்
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்கேவை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் அதிரடியாக நீக்கிவிட்டு, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அத்துடன் பாராளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார்.
அதிபரின் இந்த முடிவுக்கு ரணில் விக்கிரம சிங்கே மற்றும் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கை பாராளுமன்றம் 14-ம் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். அப்போது ராஜபச்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இந்நிலையில், அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என்றும், அதுவரை ரணில் தான் பிரதமர் என்றும் கூறியுள்ளார்.
பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின்படி ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன். 7ம் தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக தெரிவித்துவிட்டு இப்போது தாமதிப்பது ஏன்? என்றும் சபாநாயகர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாராளுமன்றத்தை கூட்டுவதில் தாமதிப்பது ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் அடைப்பததற்கு சமம் என ரணில் விக்ரமசிங்கே விமர்சித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply