தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் அவசர சந்திப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் விடுதலை முன்னணி சந்திக்கவுள்ளது.கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

இவ்விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன் பின்னணியில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதேவேளை, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேரணை எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply