நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு செல்வோம்: சுமந்திரன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை சட்டவிரோதமான முறையில் கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையை தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ள நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமை மேலும் பிரச்சினைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக சுமந்திரன் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளதாவது,
“நாட்டின் அரசியலமைப்பில் நாடாளுமன்றம் தொடர்பான சட்டத்திட்டங்கள் தெளிவாக உள்ளன. இந்நிலையில் நாடாளுமன்றம் கலைப்பட்டிருப்பதை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையகமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
மேலும் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. அதற்கு அதிகாரம் இல்லை என்பதை 19ஆவது திருத்தச் சட்டம் தெளிவாகக் கூறுகின்றது.
நாடாளுமன்றத்தைக் கலைப்பது சட்டவிரோதமானதென தெரிந்தும் அதனைச் செய்வதற்கு காரணம் தங்களுக்கான கால அவகாசத்தை அதிகரிப்பதற்காகவே என்று எண்ண தோன்றுகின்றது” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply