இடம்பெயர்ந்துள்ள மக்களின் அவசர தேவைகளின் நிமித்தம் அமெரிக்காவும் கொரியாவும் அனர்த்த உதவி

வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் அவசர தேவைகளின் நிமித்தம் ஐக்கிய அமெரிக்காவும், கொரிய குடியரசும் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளன. இவற்றில் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்காவும், ஐந்து இலட்சம் டொலர்களை கொரிய குடியரசும் வழங்கவிருக்கின்றன.

அமெரிக்காவின் யு.எஸ். எயிட் நிறுவனம் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக உணவு நிவாரணத்திற்கென வழங்குவதாக ஏற்கனவே அறிவித்த 15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாகவே இந்த ஆறு மில்லியன் டொலர்களை இந்நிறுவனம் வெளிநாட்டு அனர்த்த உதவி திட்டத்தின் ஊடாக வழங்க முன்வந்திருக்கிறது. இந்நிதியுதவி இடம்பெயர்ந்துள்ள மக்களின் குறுகிய கால உயிர்காப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கொரிய அரசாங்கம் தமது நன்கொடையை உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் அவசர தேவைகளின் நிமித்தம் ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த உதவியை உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்குவதற்கும் கொரிய அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இலங்கை அரசாங்கத்தினதும், ஐ.நா. சபையினதும் வேண்டு கோளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே கொரியா இந்த உதவியை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply