நிவாரண பணியில் கத்தோலிக்க ஆயர்கள்

புலிகளின் பிடியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு இடம்யெர்ந்துள்ள மக்களுக்கு உதவுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை ஆயர்கள் முன்வந்துள்ளனர். பேராயர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமில் ஆண்டகை தலைமையில் ஆயர் குழுவொன்று நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

பேராயருடன் மட்டு- திருமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு லெவன்ஸ் மெண்டிஸ், இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கிளிட்டஸ் பெரேரா ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றதுடன் குறுகிய காலகட்டமொன்றில் இடம்பெயர்ந்த பெருமளவு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கிவரும் அரசின் நடவடிக்கைகளுக்கும் பாராட்டுத் தெரிவித்தனர்.

இது தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த ஆயர்கள் சமூக நலன், ஆலோசனைச்சேவை, சிறுவர் நலன்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குதல் உட்பட சமூக சேவைகளில் தம்மால் உதவ முடியும் எனவும் ஆயர்கள் உறுதியளித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி தமது நன்றியையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மில்றோய் பெர்ணான்டோ, பீலிக்ஸ் பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர் பலரும் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply