இலங்கைத் தமிழர்களின் நலன்களை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் இந்தியப் பிரதமர் மன்மோன் சிங்

இலங்கைத் தமிழர்களின் நலன்களை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இலங்கையில் தற்பொழுது காணப்படும் நிலைமைகள் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி, இந்தியப் பிரதமருக்கு விளக்கிக் கூறியபோதும், தமிழர்கள் குறித்து அக்கறை செலுத்தவேண்டுமென மன்மோகன் சிங் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

எனினும், பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படும்வரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறுத்தப்படாது என இலங்;கை ஜனாதிபதி, தமது உறுதியான நிலைப்பாட்டை இந்தியப் பிரதமருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

பிஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் இலங்கையின் வடக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதநேய உதவிகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென இந்தியப் பிரதமர் வலியுறுத்திக் கூறியதாகவும், அதனை ஏற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, மக்களைப் பாதுகாப்பதற்குப் போதுமானளவு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்தும் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார். தமது படையினரை கட்டுப்பாட்டுடன் நடக்குமாறு பணிப்புரை வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி, இந்தியப் பிரதமரிடம் உறுதிமொழி வழங்கினார்.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply