இறுதியில் அம்பலமான உண்மை! இதனால்தான் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாம் ?

நாடாளுமன்றில் இன்று இடம்பெறவிருந்த அசம்பாவிதம் குறித்து புலனாய்வுதுறையினர் அதிர்ச்சிகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வை தடுப்பதற்காக சில திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.இந்த திட்டம் தொடர்பான புலனாய்வு பிரிவு அறிக்கை ஒன்று சபாநாயகருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆபத்தான செயற்பாட்டிலிருந்து நாடாளுமன்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.சபாநாயகர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான முயற்சிகள் தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகள், பொலிஸ் பிரிவு பொறுப்பான இயக்குனர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக சபாநாயகர் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்து கொள்ளவில்லை. எனினும் பிரதி சபாநாயகர் நாடாளுமன்றதை எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்தி வைத்தார்.

மிகவும் குறைந்த நேரத்தில் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply