பொதுபல சேனா பிக்குகள் மீது தாக்குதல்: உடன் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி உத்தரவு
சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதியை சந்திக்க வருகை தந்த பொதுபல சேனா அமைப்பின் பிக்குகளுக்கு கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடாத்த உத்தரவிட்டவர்கள் யார்? என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை முன்னறிவித்தல் இன்றி ஜனாதிபதியை சந்திப்பதற்கு தேரர்கள் குழுவொன்று வருகை தந்தபோது அவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடாத்த உத்தரவிட்டவருக்கு எதிராக உடன் விசாரணையை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்து அவர்களின் மகஜரை கையளித்ததாகவும், இதன்போது அந்த பிக்குகளுக்கு இடம்பெற்ற அசௌகரியங்களுக்காக ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் தனது கவலையை தெரிவித்துக் கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply