மன்னார் வைத்தியசாலையில் குணமடைந்த 117 பேர் ஆங்கில பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்

வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுத் தற்போது நன்கு குணமடைந்த 117 நோயாளர்கள் திங்கட்கிழமை மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஆங்கில பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அண்மையில் பல லட்சம் ரூபா செலவில் அதி நவீன முறையில் மேற்படி ஆங்கில பயிற்சிக்கல்லூரி அமைக்கப்பட்டது. வன்னியில் இடம்பெற்று மோதல் காரணமாக மேலும் காயமடைந்த பொது மக்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரவுள்ளனர். இதனால் ஏற்படும் இடநெருக்கடியைத் தவிர்க்குமுகமாக 117 பேர் இடமாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கில பயிற்சிக்கல்லூரிக்கு மாற்றப்பட்ட பொது மக்கள் இராணுவ பாதுகாப்புடன் தற்பொது அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இவர்களுள் ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களும் அடங்குகின்றனர். நோயாளர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களுமே இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இவர்களைப் பார்வையிடுவதற்கு எவரையும் அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆங்கில பயிற்சிக் கல்லூரியில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளமையால் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply