ஆஸ்திரேலியாவில் இந்திய ஜனாதிபதிக்கு கிடைத்த கவுரவம் : குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் ஜான் மோரிசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.
அதன்பின்னர் ஆஸ்திரேலிய கடற்படை தலைமையகத்திற்குச் சென்றார் ராம்நாத் கோவிந்த். அங்கு அவரை ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் வரவேற்றார். அப்போது ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். மேலும் 21 குண்டுகள் முழங்க வீரர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர். ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை கான்பெராவில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதுபோன்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் இந்த மரியாதை அளிப்பது மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடற்படை தலைமையகத்தில் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply