15வது இந்திய மக்களவைத் தேர்தலின் 5வது கட்ட வாக்களிப்பு நிறைவு.
தமிழகம், புதுச்சேரி உள்பட 9 மாநிலங்களில் இன்று (மே. 13) பலத்த பாதுகாப்புடன் 15வது மக்களவைத் தேர்தலின் 5வது கட்ட இறுதி வாக்களிப்பு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடியும் போது 60 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 9 மாநிலங்களில் 86 தொகுதிகளில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்திலுள்ள 4.16 கோடி வாக்காளர்கள் 39 தொகுதிகளில் வாக்களித்திருந்தனர்.
வாக்குப்பதிவை கண்காணிப்பதற்காக ஓட்டுச்சாவடிகளில் 1500 வீடியோ கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இருந்து தேர்தல் தொடர்பான புகார்களை அனைத்து தரப்பினரும் சொல்வதற்கு வசதியாக, சென்னை தலைமை செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது
மே 16, 2009 அன்று மாலை 543 தொகுதிகளுக்கான 15வது இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகுமென இந்தியத் தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply