புதிய அரசாங்கத்தில் மனோகணேசன் எடுத்துள்ள திடீர் முடிவு!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில், அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று மனோ கணேசன், றிசாத் பதியுதீன், மலிக் சமரவிக்ரம ஆகியோர் முடிவு செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மலிக் சமரவிக்கிரமவுமே, அமைச்சர் பதவிகளை ஏற்பதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அரசாங்கத்தில் பிரதமர், ஜனாதிபதி தவிர 28 அமைச்சர்களையே நியமிக்க முடியும். இதனால், கட்சி தாவிய உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளைக் கேட்பதால், புதிய அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறிகள் காணப்படுகின்றன.

இந்த நிலையிலேயே, மனோ கணேசன், றிசாத் பதியுதீன், மலிக் சமரவிக்ரம ஆகியோர் அமைச்சர் பதவிகளை ஏற்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply