மஹிந்தவின் பாராளுமன்ற அங்கத்துவப் பிரச்சினை: பாராளுமன்றில் சர்ச்சை
சுதந்திர கட்சியை விட்டும் விலகி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சியுடன் இணைந்த மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அரசியலமைப்பின் பிரகாரம் இல்லாமல் ஆவதாகவும், இப்படியான ஒருவரை எப்படி எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கலாம் எனவும் பாராளுமன்ற அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.
நேற்றைய பாராளுமன்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் சர்ச்சை எழுப்பப்பட்டன. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால வெளியிட்ட பாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையடுத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன பெரமுனவில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உத்தியோகபுர்வமாக அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். நாமல் ராஜபக்ஷ மற்றும் சில ஸ்ரீ ல.சு.க. யின் உறுப்பினர்களும் இவ்வாறு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டனர்.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி போட்டியிட்ட போது, பாராளுமன்றத்திலுள்ள அங்கத்தவர்கள் பலருக்கு அக்கட்சியில் இணைந்து கொள்ள முடியாமல் இருந்தது. காரணம் அவ்வாறு இணைந்து கொண்டால் தமது பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க வேண்டி ஏற்படும் என்பதனாலாகும்.
இருப்பினும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என்ற நம்பிக்கையில் கட்சியை விட்டும் விலகியவர்கள், கட்சியை விட்டும் விலகியவர்களாகவே கருதப்படுகின்றனர். இவ்வாறு தேர்தலில் தன்னைத் தெரிவு செய்த கட்சியிலிருந்து விலகியவர்களின் உறுப்புரிமை பறிபோகும் என்பது பாராளுமன்ற சட்டத்தில் உள்ள ஒன்றாகும்.
இது குறித்தே நேற்று பாராளுமன்றத்தில் சர்ச்சைகள் எழுந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் இதே அங்கத்துவப் பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply