பிரிட்டனில் குழந்தைக்கு ஹிட்லரின் பெயரை சூட்டிய தம்பதிக்கு சிறைத்தண்டனை

பிரிட்டனின் பேன்பரி நகரத்தைச் சேர்ந்த ஆடம் தாமஸ்-கிளவுடியா தம்பதியர், தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ஃப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். அத்துடன், நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள் என்றும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தம்பதியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து தாமசுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளவுடியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விருவருக்கும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகள் இருந்ததற்கான நெடிய வரலாறு இருக்கிறது என நீதிபதி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply