ஹாங்காங்கில் மாடியில் இருந்து பணத்தை வீசிய வாலிபர் கைது
ஹாங்காங்கை சேர்ந்த வாலிபர் வாங் சிங் கிட் (வயது 24). இளம் தொழில் அதிபரான இவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரர். இணைய பணமான ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்து பல கோடிகளை சம்பாதித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இவர் ஹாங்காங்கின் ஷாம் ஷு போ என்கிற மாவட்டத்துக்கு தன்னுடைய ஆடம்பர காரில் சென்றார். பின்னர் அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற வாங் சிங் கிட், அங்கு நின்றபடி பணத்தை தூக்கி வீசி எறிந்துள்ளார்.
இதனால் அந்த பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு பணத்தை சேகரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே வாங் சிங் கிட் பணத்தை வீசி எறிந்தது மற்றும் மக்கள் சண்டை போட்டுக்கொண்டு பணத்தை எடுத்துச் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி வாங் சிங் கிட்டை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சில மோசடி புகார்கள் இருப்பதாக தெரிகிறது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply