சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் விபரங்கள்
அமைச்சரவை அந்தஸ்து இல்லாத 3 அமைச்சர்கள், 17 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 7 பிரதி அமைச்சர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (21-12-2018) மாலை குறித்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
இதேவேளை, இவ்வாறு அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றவர்களுள் எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள்
பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சராக ஹர்ஷ டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக அஜித் பி பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக சுஜீவ சேனசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இராஜாங்க அமைச்சர்கள்
கல்வி இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சராக ஜே.சி. அலவத்துவல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ருவான் விஜேவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரத்துறை இராஜாங்க அமைச்சராக நிரோஷன் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சராக சம்பிக்க பிரேமதாஸ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நிதி இராஜாங்க அமைச்சராக எரான் விக்ரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அமீர் அலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரஞ்சன் அலுவிஹார ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக வசந்த அலுவிஹார ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
போக்குவரத்து சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக அசோக்க அபேசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சுகாதார போசனை, சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சராக பைசல் காசிம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக எச்.எம்.எம். ஹரீஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக திலிப் வெதஆரச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக ஏ.இசட்.எம். செயிட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதி அமைச்சர்கள்
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக நளின் பண்டார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக புத்திக பத்திரண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பெற்றோலிய வள அபிருத்தி பிரதி அமைச்சராக அனோமா கமகே அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அலுவல்கள் பிரதி அமைச்சராக எட்வட் குணசேகர மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சுற்றாடல்துறை பிரதி அமைச்சராக அஜித் மான்னப்பெரும மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
திறன் விருத்தி, தொழிற்பயிற்சி பிரதி அமைச்சராக கருணாரத்ன பரனவிதான மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராக பாலித குமார தெவரப்பெரும மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply