பாராளுமன்ற சம்பிரதாயப்படி எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த தான் : ஸ்ரீ ல.சு.க.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டுவருவதானது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு எதிரானது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
இப்பொழுது நாம் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளோம் என அக்கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாம் இப்போது எதிர்க் கட்சியில் அமர்ந்துள்ளோம். பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு ஏற்ப அதிகாரத்தில் இருந்துவிட்டு எதிர்க் கட்சிக்குச் சென்றவர்தான் எதிர்க் கட்சித் தலைவராக வர வேண்டும். இந்த பாராளுமன்ற சம்பிரதாயம் கூட தெரியாத நிலையில் தான் எதிர் தரப்பிலுள்ள கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்து பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக மாறி, அதனையடுத்து 50 நாள் பிரதமராக பொறுப்பேற்று, தற்பொழுது எதிர்க் கட்சித் தலைவராக வருவதற்கான அரசியல் போராட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ இறங்கியுள்ளமை ஒரு விசேட தன்மையாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply