2000க்கு மேற்பட்ட மக்கள் இராணுவம் விடுவித்த பிரதேசத்துக்குள் வருகை; 6000க்கு மேற்பட்ட மக்கள் தப்பி வெளியேறி களப்புக் கடல் நீரில் அந்தரிப்பு
முள்ளிவாய்க்கால் பகுதியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில் புலிகள் பணயமாக வைத்துள்ள பொது மக்களை விடுவிக்கும் மனிதாபிமான மீட்டுப் பணியின் இறுதி அத்தியாயத்தில் படையினர் இறங்கியுள்ளனர். வெள்ளமுள்ளி வாய்க்கால், கரையாமுள்ளி வாய்க்கால் பகுதிகளை நோக்கி இரு திசைகளிலும் இராணுவம் இன்று ( மே 14) முன்னேறி, புதிய பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் யுத்த கேடயமாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுசனத்தில் 2000க்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பாக வெளியேறக் கூடிய சூழலை ஏற்படுத்தினர். புதிய பாதுகாப்பு வலயத்தை நோக்கிய இராணுவத்தின் வருகையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி 6000க்கு அதிகமான மக்கள் களப்புக் கடல் ஊடாக வெளியேறிவருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நந்திக்கடல் ஊடாக தப்பிச்சென்ற பொது மக்கள் மீது புலிகள் மிலேச்சத்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக உயிர் தப்பி வந்த பலர் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமான மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம், புலிகள் 5000 அதிகமான பொது மக்களை சுதந்திரமாக வெளியேற விடாது பலாத்காரமாக தடுத்து வைத்திருப்பதை அறிக்கூடியதாக இருப்பதாக படைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply