இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை- டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 23% குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பை விட 55% குறைவாக மழை பெய்துள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply