ஜனாதிபதி கொலை சதி முயற்சியொன்று இடம்பெறவில்லை :அமைச்சர் மத்தும பண்டார
ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்ய எந்தவித சதி முயற்சியும் இடம்பெறவில்லையென்பதே எனது கருத்து என அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.
தான் சம்பந்தப்பட்ட அமைச்சராக இருந்து இது தொடர்பான விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுத்தேன். இந்த விசாரணைகளின்படி கூற முடியுமான ஒரே விடயம் அவ்வாறு ஒன்று நடைபெறவில்லையென்பதே எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இன்று (26) கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply