SLFP தலைமையகத்திற்கு சீல் வைக்கப்படவில்லை
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் சேவையாற்றும் பணியாளர்களுக்கு வருடாந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பணிக்கு திரும்பியதும் ஜனவரி முதலாம் திகதி சுப நேரத்தில் கட்சியின் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வருட இறுதிப்பகுதி என்பதனால் பெரும்பாலான எம்.பி க்கள் கொழும்பை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் இதனால் தலைமையகத்தில் விசேட கடமைகள் இடம்பெறுவதில்லை எனவும் கட்சியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply