பாதுகாப்பு செயலருக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிடுவதில்லை
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படும் வகையிலான எந்தவொரு செய்தியையும் எதிர்காலத்தில் பிரசாரம் செய்வதில்லையென லீடர் பப்ளிகேஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. லீடர் பப்ளிகேசனில் கடந்த வருடம் வெளியான ஒரு செய்தி பாதுகாப்புச் செயலாளருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டு, 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் திகதி பாதுகாப்பு அமைச்சரினால் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கு தொடரப்பட்டிருந்தது முதல் நேற்று வரை லீடர் பப்ளிகேஷனில் பாதுகாப்புச் செயலாளர் தொடர்பான செய்திகளை பிரசுரிப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. கல்கிசை மாவட்ட மேலதிக நீதவான் மெக்கி மொஹமட் இந்த வழக்கை நேற்று மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே லீடர் பப்ளிகேஷன் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள், பாதுகாப்புச் செயலாளருக்கு அவதூறு ஏற்படும் வகையிலான எந்தவொரு செய்தியையும் எதிர்காலத்தில் பிரசுரிப்பதில்லையென உறுதியளித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply