பிரான்சை தொடர்ந்து தைவானிலும் மஞ்சள் அங்கி போராட்டம்

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது மஞ்சள் அங்கி போராட்டம் என்ற மக்கள் போராட்டத்துக்கு வித்திட்டது. கார் டிரைவர்கள் தான் முதலில் இந்த போராட்டத்தை தொடங்கினர்.

அதன்பிறகு மஞ்சள் அங்கி அணிந்த மக்கள் அவர்களுடன் கைகோர்த்ததும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஒரு மாதத்துக்கு மேல் நடந்த இந்த போராட்டத்துக்கு அரசு பணிந்தது. வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த நிலையில் பிரான்சை தொடர்ந்து தைவானும் மஞ்சள் புரட்சியில் இறங்கியுள்ளது. குறைந்தபட்ச வரி விதிப்பு வேண்டும் என்றும், வரி விதிப்பில் பாரபட்சமின்றி செயல்பட கோரியும் ஆயிரக்கணக்கான தைவான் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மஞ்சள் நிற உடைகளை அணிந்து, வரிவிதிப்பு கொள்கைகள் சட்ட ரீதியாக இல்லை என்ற பதாகைகளை ஏந்தி நிதி அமைச்சகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply