சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட 55 இலங்கையர் கைது

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 55 இலங்கையர்கள் இந்தோனேசியாவின் மேற்குக் கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் வக்கு மாகாண கரைப்பகுதியான ஆச்சேயிலிருந்து ல் 2 கிலோமீற்றர் தூரத்தில் சேதமடைந்த மரப்படகொன்றில் இவ் 55 பேரையும் மீனவர்கள் பார்த்துள்ளனர். மீட்கப்பட்ட 55 பேரும் இரு கிலோமீற்றர்கள் நீந்தி வந்தமையால் சோர்வடைந்து காணப்படுவதாக தெரிவித்த ஆசே நகன் ரயா பொலிஸ் தலைமை அதிகாரி அரிச பியான்டோ இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக அவர்கள் செல்வதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவித்தர்.

இக்குழுவினர் இலங்கையை விட்டு மே மாதம் 2 ம் திகதி புறப்பட்டுள்ளனர். மே 8இல் மலேசியாவில் தங்கியுள்ளனர். கைதான 55 பேரும் சுமார் 25௩0 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தங்களுடன் வந்த சிலர் காணாமல் போய்விட்டதாக இந்த இலங்கையர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். 55 பேரும் தங்க வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இவர்களது உடல் நிலை தேறி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply