பிலிப்பைன்ஸில் பலமான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்வு ரிச்ட்டர் அளவு கோலில் 7.2 அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக அதிர்ந்துள்ளதாகவும் சேதவிபரங்கள் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இந்த அனர்த்தத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லையென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply