ஐ.நா.வில் மரண தண்டனைக்கான பிரேரணை நிறைவேற்றம், இலங்கையும் ஆதரவு

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணைக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்துள்ளது.இந்த மரண தண்டனை வழங்குவதை அங்கீகரிக்கும் ஐ.நா.வின் பிரேரணைக்கு ஆதரவாக 121 நாடுகள் வாக்களித்துள்ளன. இதனை எதிர்த்து 35 நாடுகள் வாக்களித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

32 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ள வில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா.வின் 72 ஆவது கூட்டத்தில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் மரண தண்டனை சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டு வர தீர்மானித்த போது மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் என்பன அதற்கு எதிராக கருத்துத் தெரிவித்தன. 2017 ஆம் ஆண்டு உலகிலுள்ள 22 நாடுகளில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஐ.நா.வில் இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கையில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த பிரச்சினைகள் இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது இலங்கையில் போதைப் பொருள் வியாபாரம் உட்பட பல குற்றச் செயல்கள் தொடர்பில் 121 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகளிடையே பெண்களும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply