48 மணித்தியாலங்களுக்குள் மோதல்கள் முடிந்து விடும்: ஜனாதிபதி

பாரிய மனித அவலம் ஏற்படும் என்பதால் உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் விடுத்திருக்கும் கோரிக்கையை நிராகரித்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்னும் 48 மணித்தியாலங் களுக்குள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் எனக் கூறியுள்ளார். மோதல்கள் எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை காலையுடன் முடிவடைந்துவிடும் என அரசாங்கப் பேச்சாளர் அனுஷ பல்பிட்ட சர்வதேச செய்திச் சேவையொன்றிடம் தெரிவித்தார்.

“அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பதை ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளார்” என அவர் கூறியுள்ளார்.  “விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களும் விடுவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

அதேநேரம், விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் அரசாங்கப் படைகள் தொடர்ந்தும் மனிதநேய இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தொடரும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் உட்பட சர்வதேச சமூகங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.  ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் தனது விசேட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பவுள்ள நிலையிலேயே எதிர்வரும் 48 மணித்தியாலத்துக்குள் அனைத்துப் பகுதியும் மீட்கப்பட்டுவிடுமென ஜனாதிபதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply