நாய்களை சுடுவதைபோல் மனிதர்கள் தற்பொழுது சுடப்படுகின்றனர் : மகிந்த ராஜபக்ச
தற்பொழுதுள்ள ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் மக்களை நாய்கள் சுடுவதைபோல் பாதாள குழுவினர்களால் கொலை செய்யப்பட்டு வருகின்ற நிலை நாட்டில் நடை பெறுகின்றது.
என முன்னால் ஜனாதிபதியும் குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றார். தற்பொழுது தெற்கில் பல பகுதிகளிலும் விகாரைகளில் தொடர் மத வைபவங்களில் பங்கு பற்றி மக்களுக்கும் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்து வரும் மகிந்த அவர்கள் அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் அங்கம விகாரையில் நடைப்பெற்ற மத வாழிபாட்டின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் தற்போதைய அரசு நாட்டை சீரழித்து வருவதாகவும் வெகுவிரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அதை தொடர்ந்து மாகாண சபை தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் ஆனால் நாம் கோருவது பாராளுமன்ற தேர்தலேயாகும் எனவும் குறிப்பிட்டதோடு தற்போதைய அரசு அமைச்சு பொருப்புக்களை பகிர்ந்துக்கொள்வதில் தோல்வியேற்பட்டு பிளவுகளை எதிர்கொள்வதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply