சீன அதிபர் மிரட்டலால் தைவானில் போர் பதட்டம்

சீனா அருகே தைவான் நாடு உள்ளது. இந்த நாடு அமைந்துள்ள இடம் ஒரு தீவு ஆகும். ஒரு காலத்தில் தைவான் சீனாவின் அங்கமாக இருந்தது. அங்கு நடந்த உள்நாட்டு பிரச்சினை காரணமாக தைவான் தனி நாடாக மாறியது. ஆனாலும், தைவானை தனி நாடாக இதுவரை சீனா ஏற்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தனி நாடாக ஏற்றுள்ளன.

அமெரிக்கா அந்த நாட்டுக்கு ராணுவ உதவிகளை செய்வதுடன் படை தளத்தையும் அமைத்துள்ளது.

சீனா தொடர்ந்து தைவான் தங்களது நாட்டின் பகுதி. அதை எங்கள் நாட்டோடு இணைப்போம் என்று கூறி வந்தது.

இந்த நிலையில் நேற்று சீன அதிபர் சி ஜின்பிங் கூறும்போது, தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனாவுடன் இணைப்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். தைவானும், சீனாவும் ஒரே நாடுதான்.

எனவே, தைவான் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.

இதற்கு எங்களது நாடு இறையாண்மை கொண்டது. யாரையும் கைப்பற்ற விட மாட்டோம் என்று தைவான் கூறி உள்ளது.

சீன அதிபரின் மிரட்டலால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தைவான் ஏற்கனவே சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் தனது ராணுவத்தை எப்போதும் தயாராக வைத்திருந்தது. இப்போது சீன அதிபரின் மிரட்டலால் மேலும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது.

சீனா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply