ஜேர்மனிய அரசியல்வாதிகளின் பிரத்தியேகத் தகவல்கள் வெளியானதால் சர்ச்சை!

ஜேர்மனிய அரசியல்வாதிகளின் பிரத்தியேகத் தகவல்கள் இணைய ஊடுருவிகளினால் களவாடப்பட்டு இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் உள்ளிட்ட உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்ட ஜேர்மனிய அரசியல்வாதிகளின் தகவல்கள் இவ்வாறு இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவர்களது தனிப்பட்ட மின்னஞ்சல்கள், அவர்களது தனிப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் அவர்களது கடனட்டை விவரங்கள் கசியவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அரசியல்வாதிகளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஊடாக இந்த தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜேர்மனிய அரசியல்வாதிகளின் பிரத்தியேகத் தகவல்களை இணையத்தில் வெளியிட்டுள்ள இணைய ஊடுருவிகள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனியப் பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply