ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிக்காவிடின் நாட்டின் பாரிய கடன் சுமை குறைந்திருக்கும் :பிரதமர்

ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிக்காவிட்டால் நாட்டின் பாரிய கடன் சுமைகளில் பெரும்பாலானவை குறைக்கப்பட்டிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனநாயகத்தை வென்றெடுத்தது போல, பொருளாதாரத்தையும் தமது அரசாங்கம் வென்றெடுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் ‘நாட்டின் பொருளாதாரம் எந்த நேரத்திலும் பாரிய வீழ்ச்சி நிலைக்குச் செல்லலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் இந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசமைப்பு நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தக் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 52 நாட்கள் ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிருக்காவிட்டால் நாட்டின் பெரும்பாலான கடன் சுமைகள் குறைக்கப்பட்டிருக்கும் என ரணில் கூறும்போது மஹிந்த ராஜபக்‌ஷ அமைதியாயிருந்து அவரது உரையைக் கேட்டுக்கொண்டிடுந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply