வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 500 இளைஞர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் தொழில் பயிற்சிக்கான புலமைப்பரிசில் வழங்கவுள்ளது

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 500 இளைஞர், யுவதிகளுக்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் தொழில் பயிற்சிக்கான புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியான யு. எஸ். எயிட் நிறுவனத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் றெபேக்காகோன் தெரிவித்தார். மட்டக்களப்பில் கடந்த புதன் கிழமை (மே. 13) நடைபெற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் நெறிக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே றொபேக்கா கோன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு ஹோப் இன் ஹோட்டலில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியினூடாக அமெரிக்க மக்கள் ஏறத்தாள 50 வருடங்களாக உலகம் முழுவதிலுமுள்ள அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்திக்கான உதவிகளையும், மனிதாபிமான உதவிகளையும் வழங்கிவந்துள்ளார்கள்.

இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக 1946 ஆம் ஆண்டு முதல் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கையில் ஏறத்தாள இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500 இளைஞர்களுக்கு இப்புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளன.

வரையறையற்ற ஆற்றலுள்ள பங்காண்மை நிகழ்ச்சித்திட்டத்தினூடாக இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது ஆடை, ஊடகங்கள், சுற்றுலாத்துறை என்ற மூன்று தொழில்களும் தெடார்பாக வரையரையற்று பங்கான்மை, தொழிற் சேனைப் பயிற்சித்திட்டங்களை வழங்குகின்றது.

விவசாயக் கல்வி நெறிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply