மேற்கு சூடானில் பழுதாகி நின்ற லாரி மீது பஸ் மோதியது- 14 பேர் பலி

சூடான் நாட்டின் தலைநகர் கர்த்தூமில் இருந்து புறப்பட்டு வந்த பயணிகள் பேருந்து ஒன்று, சாலை ஓரம் நின்றுக்கொண்டிருந்த பழுதான லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இவ்விபத்து வடக்கு டார்பூர் மற்றும் மேற்கு கொர்டாஃபன் மாநிலம் இடையே உள்ள உம் கடதா எல்லையில் மேற்கு சால்வேஷன் சாலையில் நடந்தது.

இது குறித்து உம் கட்தா காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காயமடைந்தவர்கள் எண்ணிக்கை முழுமையாக தெரியாத நிலையில், மீட்கப்பட்டோர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலில் அதிகம் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் சூடானும் இடம்பெற்றுள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், சிதிலமடைந்த சாலைகள் மற்றும் மோசமான வாகனம் அகற்றும் அமைப்பு ஆகியவை காரணமாக விபத்துகள் அதிகரித்துள்ளன. விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைகளில் வேகத்தை கண்காணிக்க ரேடர்களை நிறுவுதல் போன்ற புதிய திட்டங்களை வகுத்து வருவதாக உள்துறை மந்திரி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply