132 புதிய ஆம்புலன்ஸ் வண்டிகள் சுகாதார சேவைக்கு
நாடுபூராகவும் உள்ள 132 வைத்தியசாலைகளுக்குத் தேவையான ஆம்புலன்ஸ்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சுகாதார போசணைகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்னவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இங்கிலாந்தின் Ford நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட 132 ஆம்புலன்ஸ் வண்டிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்திற்காக 2500 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மாகாண சபை மருத்துவமனைகளுக்கு 103 ஆம்புலன்ஸ் வண்டிகளும், மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு 27 வண்டிகளும், ஆயுர்வேத திணைக்கள மருத்துவமனைகளுக்கு 2 ஆம்புலன்ஸ் வண்டிகளும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக சுகாதா அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை இதற்கு மேலதிகமாக ஜேர்மனியின் பென்ஸ் நிறுவனம் தயாரித்த 100 ஆம்புலன்ஸ் வண்டிகளும் விரைவில் மருத்துவமனைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. ஏற்கனவே 40 ஆம்புலன்ஸ் வண்டிகள் மருத்துவமனைகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply