நாட்டு மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்திய எதிர்கட்சி தலைவர் மஹிந்த…!

மழையிலும் வெயிலிலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் உழவர்களின் நலனின் அக்கறை கொண்டு பேணுவதில் நான் என்றும் தவறியவன் அல்ல என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தைத் திருநாளை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியும், இந்நாள் எதிர்க் கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தமிழில் பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்.

தைத்திருநாள் உழவர் பெருநாள் மட்டுமல்ல, நன்றியறிதல் எனும் உயரிய மனப்பாங்கை வெளிப்படுத்துவதுமாகும் இது தமிழ் மக்கள் உலகிற்கு எடுத்துரைக்கும் நலன்மிகு முன்னுதாரணமாகும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு அதற்கமைய எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்கள் நீங்கி நலங்களும் வளங்களும் பெற்று வாழ வேண்டும்.

அத்தோடு நாட்டில் நிலவுகின்ற இயற்கை சீற்றத்திலிருந்து மீண்டு அனைவரும் மீள எழு எழுச்சி பெறுவோம். அதற்காக அனைவரும் ஒன்றிணைவோம்.

மழையிலும் வெய்யிலிலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் உழவர்களின் நலனின் அக்கறை கொண்டு பேணுவதில் நான் என்றும் தவறியவன் அல்ல. இந்தப் பொங்கல் அனைவருக்கும் நல்லதாக அமையட்டும்.

இலங்கை மக்கள் அனைவருக்கும் நல்லிணக்கமும், அன்பும் கிடைப்பதற்கு எதிர்கட்சி தலைவர் என்ற வகையிலும் அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிட வேண்டுமென பிராத்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply