அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டம்:சஜித் பிரேமதாச
அறநெறிக் கல்வியை வலுப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்ட சீதாராம விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போது உரையாற்றிய அமைச்சர் சஜித் கலாசார அமைச்சர் என்ற வகையில் தான் நடைமுறைப்படுத்தும் முதல் வேலைத்திட்டமாக இது அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சீதாராம விகாரையில் அமைக்கப்பட்டுள்ள அறநெறிப் பாடசாலைக்கான கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
அனைவருக்கும் நிவாரணம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த கட்டடத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply