பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ளார்: சூசையின் மனைவி

முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (மே 15) காலை கைது செய்யப்பட்ட சூசையின் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட 11 பேர் புல்மோட்டையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நடந்த விசாரணையில், ’’பிரபாகரன், பொட்டு அம்மான், எனது கணவர் சூசை உட்பட பல புலிகளின் முக்கிய தலைவர்கள் இன்னும் முள்ளிவாய்க்கால் பகுதியில்தான் இருக்கிறார்கள்’’ என சூசையின் மனைவி சத்தியதேவி தெரிவித்துள்ளார்.

இவருடன் கைது செய்யப்பட்ட மொத்தம் 11 பேரில் இவரின் நெருங்கிய உறவினர்கள் ஐவரை தவிர மற்றவர்களில் ஒருவர் புலிகளின் கப்பல் மாலுமி ஆவார். இன்னொருவர் புலிகளின் பாடல்கள் பாடி புகழ் பெற்ற சாந்தன் ஆகும்.

1982ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி புலிகள் அமைப்பில் முதல் மறைந்த போராளியும் புலிகளின் மாவீரர் நாள் நவம்பர் 27க்கு காரண கர்த்தாவுமான உடுப்பிட்டி, கம்பர்மலையை சேர்ந்த சங்கர் என்றழைக்கப்படும் செ.சத்தியநாதன் என்பவரின் சகோதரியே சூசையின் மனைவி சத்தியதேவியாகும்.

அத்துடன், படையினரிடம் சரணடைந்த புலிகளின் வைத்தியரான சுசிதரன் கடந்த 10ம் (மே) திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரனை தான் கண்டதாக தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply