சிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி
சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. சிரியாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டுகளுக்கு இரையாகி உள்ளனர்.
இந்நிலையில், சிரியாவின் டெயிர் அல் சோர் மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் மீது சர்வதேச கூட்டுப் படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply