சுத்த சூனியமானது சூசையின் புலிக் கடற்படைகள்
முல்லைத்தீவு கடலோரமாக வட்டுவாகல் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி முன்நகர்ந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான 59வது படையணியும், கரையமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தி இருந்து தெற்கு நோக்கி நகர்ந்த பிரிகேடியர் சவிந்திர சில்வா தலைமையிலான 58வது படையணியும் இன்று (மே 16) காலை இணைந்துள்ளதாக பாதுகாப்பு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் புலிகள் முற்றுமுழுதாக கடல் பிராந்திய தொடர்பு எதுவும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளனர். புலிகளின் தலைவர்கள் கடல் மார்க்கமாக தப்பிச்செல்லக் கூடிய வாய்ப்புகள் மேலும் அருகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இலங்கையின் நீண்ட தசாப்த காலமாக புலிகளின் ஆழுமைக் குட்படுத்தபட்டிருந்த வடகரையோரத்தை இராணுவத்தின் இன்று காலை முற்றாக விடுவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களாக தென்கரையோரமாக நகர்ந்து வந்த 58வது படையணியினர் இன்று காலை 59வது படையணியினருடன் இணைந்துள்ளது. 58வது டிவிசன் படையினர் இதன்போது 4300 பொதுமக்களை மீட்டுள்ளனர். இவர்களுள் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களின் குடும்பத்தினர் பலரும் மற்றும் பல புலி உறுப்பினர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரணடைந்த புலி உறுப்பினர்களிடையில் கரும்புலி உறுப்பினர்களும் அடங்குவதாக மேலும் தெரிவந்துள்ளது.
இதேவேளை, நந்திக்கடல் ஏரியின் தென்பகுதி ஓரமா நகர்ந்த 53வது டிவிசன் படையினர் நேற்று 4550 பொதுமக்களை விடுவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply