வெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி : பாலி அதிகாரிகள் அதிரடி
பாலியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து அந்நாட்டின் அரசு புதிய வரியை விதித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் உள்ளூர் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
பாலி தீவின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் இந்த வருவாய் பயன்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த வரியினை சுற்றுலா பயணிகள், விமான டிக்கெட்டுகளுடன் சேர்த்தோ அல்லது விமான நிலையத்திலோ செலுத்த நேரிடும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் 2017 ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதானமாக 5.7 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாலிக்கு வருகை தந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 6 மில்லியனை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply