ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் அமைக்கப்படும் :பிரதமர் ரணில் விக்ரமசிங்க
புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புக்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் சக்தி ஒன்றை கட்டியெழுப்புவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று தெமட்டகொடையில் இடம்பெற்ற சியபத் செவன வீடமைப்பு திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டை கட்டியெழுப்புவதே இந்த அரசியல் கூட்டணியின் நோக்கமாகும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply