சிரியா அகதிகளுக்கு கத்தார் ரூ.355 கோடி நிதி : 4ஐ.நா. பொதுச்செயலாளர் வரவேற்பு
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.இந்தப் போரினால் கடந்த ஆண்டு நிலவரப்படி சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 24 லட்சம் பேர் அகதிகளாக பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.
சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் மறுவாழ்வுக்காக கத்தார் நாட்டு மன்னர் 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.355 கோடி) நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த தாராள நிதி உதவியை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.
இதுபற்றி அவர் சார்பில் ஐ.நா. சபை துணை செய்தி தொடர்பாளர் பர்கான் ஹக் கூறும்போது, “இந்த நிதி உதவிக்காக கத்தார் நாட்டு மன்னருக்கும், அந்த நாட்டு மக்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்” என குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply