தெற்கு பிலிப்பைன்சில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு: 19 பேர் பலி

தெற்கு பிலிப்பைன்சில் உள்ள தீவு ஜோலோ. இங்குள்ள ரோமன் கத்தோலிக் தேவாலயத்திற்கு அருகில் பயங்கர சத்தத்துடன் இன்று குண்டு வெடித்தது. சிறிதி நேரம் கழித்து அரசுப் படைகள் தங்கியிருந்த முகாம் அருகில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் அரசுப் படைகள் மற்றும் பொதுமக்கள் என 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த 48 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பொதுமக்கள் கூடும் இடம், வழிபாட்டுத் தலங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply