கிழக்கு முதல்வரின் செயலாளர் அத்துருகிரியவில் சுட்டுக் கொலை
அத்துருகிரிய சந்தியில் இன்று காலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டனர். பி.எம்.டபிள்யு சொகுசு வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த போதே இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
கொல்லப்பட்வர்களில் ஒருவர் கிழக்கு மாகாண முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான குமாரசாமி நந்த கோபாலன் எனத் தெரிய வருகிறது.
இவர்களது வாகனத்தை பின் தொடர்ந்த வெள்ளை வானில் வந்தவர்களே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துருகிரிய-கொஹவல வீதியிலுள்ள வாகன விற்பனை நிலையமொன்றுக்கருகிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அத்துருகிரிய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply