ஜோர்தானிலிருந்து ஜனாதிபதி படை வீரர்களுக்கு வாழ்த்து

முல்லைத்தீவு கடற்பரப்பில் முள்ளிவாய்க்காலுக்கு வடக்கேயும், தெற்கேயும் முன்னேறிய 58வது படையணியும் 59வது படையணியும் கடற்கரை பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதனையும் இரு படைப்பிரிவும் முள்ளிவாய்க்கால் பகுதியில் சங்கமித்துக் கொண்டன என்ற செய்தியையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜோர்தானிலுள்ள ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலம் அறிவித்தார்.

இதனையடுத்து ஜோர்தானிலிருந்தவாறே ஜனாதிபதி படையினருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள மக்களை படையினர் மீட்கும் நடவடிக்கை மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து படையினரின் முன்னகர்வு நடவடிக்கைகள் குறித்தும் களநிலைமைகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜோர்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவ்வப்போது தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். எந்நேரத்திலும் புலிகளின் தலைவர் பிடிபடலாம் என்ற எதிர்பார்ப்போடு படையினர் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply