‘ஒரு இனம் இன்னொரு இனத்தை தோற்கடித்த வெற்றியல்ல’: ஜனாதிபதி
பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. 30 ஆண்டுகளின் பின்னர் நாடு முழுவதும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. புலிகளின் பிடியிலிருந்த சகல பிரதேசங்களும் படையினரால் முற்றாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கை முல்லைத்தீவுடன் வெற்றிகரமாக முடிவ டைந்திருக்கிறது.
வடக்கில் இரு முனைகளில் முன்னேறிய படை யணிகள் நேற்று முன்தினம் முல்லைத்தீவுக் கரையோ ரத்தில் ஒன்றுடன் ஒன்று சங்கமித்துக்கொண்டன.
உலகில் மிகப் பலம்பொருந்திய இயக்கமாகக் கருதப்பட்ட புலிகள் முழுமையாக படையினரால் தோற்க டிக்கப்பட்டு சாதனை புரியப்பட்டுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கை மூலம் பெறப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சாதனையைக் கண்டு இன்று உலகம் வியந்து நிற்கிறது. புறமுதுகுகாட்டிய புலிகளைக் காப் பாற்ற சர்வதேசம் அரசுக்குக்கொடுத்த அழுத்தத்திற்கு மத்தியிலும் இலங்கையின் உறுதியான தலைமைத்துவ த்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக் கையின் வெற்றிகண்டு சர்வதேசம் பேதலித்து நிற்கிற தென்றே தெரிகிறது.
இந்த வெற்றி “ஒரு இனம் இன்னொரு இனத்தை தோற்கடித்த வெற்றியல்ல” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக கூறியிருக்கிறார். மனிதாபிமான நடவடிக்கை மூலம் “ஒரே நாடு ஒரே மக்கள்” என்ற மஹிந்த சிந்தனைக் கோட்பாடு நிறைவேற்றப்பட்டிருக் கிறதென்றே உணரமுடிகிறது.
போராட்டமென்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த கொடூரமான செயற்பாடுகளும் ஆயுதக் கலாசாரமும் இலங்கைத் திருநாட்டை மட்டுமல்ல தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களையும் வெகுவாகப் பாதித்ததென்பதை எவரும் மறுக்க முடியாது.
இலங்கையின் அரசியல் தலைவர்களும் கல்விமான் களும் புத்தி ஜீவிகளும் புலிகளால் கொல்லப்பட்டார்கள். அதற்கும் அப்பால் தமிழ்த் தலைவர்களும், கல்விமான்களும் அழிக்கப்பட்டார்கள். த.வி.கூ முன்னாள் செயலதிபர் அ. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன்திருச்செல்வம், சாம்தம்பிமுத்து போன்ற மிதவாத அரசியல் தலைவர்களும் யாழ். பல்கலைக்கழக கல்வி மான் திருமதி ராஜினி திரணகம, யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா போன்ற கல்விமான்களும் புலிகளின் பயங்கரவாதத்தினாலேயே கொல்லப் பட்டனர்.
இதனோடு நிற்கவில்லை. தமிழ் போராளி இயக்கங்களை கொன்று குவித்தவர்களும் இவர்கள்தான். புளொட் தலைவர் உமாமகேஸ்வரன், ரெலோ இயக்கத் தலைவர் சிறி சபாரத்தினம், ஈ. பி. ஆர். எல். எப் தலைவர் பத்மநாபா போன்றவர்கள் கொலை செய்யப்பட்டனர். மேற்படி இயக்கங்களின் போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மட்டுமல்ல கொடூரமாக டயரில் போட்டு எரிக்கப்பட்டார்கள்.
இத்தகைய கொடூரத்திற்கு இப்போது முடிவு காணப் பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தினாலேயே தமிழ் மக்கள் அன்னியப்பட்டுப்போனார்கள். சகோதர இனங்கள் தமிழர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது புலிக ளின் கொடூரமான செயற்பாடுகளினால்தான் என்பதை நாம் மறுக்க முடியாது.
நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும், ஏன்? ஆசிய நாடு களுக்கே சவால்விடுகின்ற அளவுக்கு விசுவரூபமெடு த்திருந்த இந்தப் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதென்பதை நினைக்கும்போது தேசப்பற் றுள்ள எந்தவொரு பிரஜையும் மகிழ்ச்சியடைவர்.
“பயங்கரவாதிகளிடமிருந்து விடுதலை பெற்ற இலங் கைத் திருநாட்டுக்கே நான் திரும்பிச் செல்கிறேன்.” ஜோர்தானில் நடந்த ஜீ-11 மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரையின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன் மூலம், புலிகளின் பயங்கரவாதம் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதனை ஜனாதிபதி உலகுக்குப் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
30 ஆண்டுகள் நாட்டை நிலைதடுமாறவைத்த இந் தக் கொடூரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டின் வரலாற்றை புதிதாக எழுதவைத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. வடக்கையும் தெற்கையும் இணைத்த இந்த பெருமகனின் வரலாறு என்றும் பேசப்படும்.
பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டுள்ளதென்பது நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் பெரும் தெம்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்கால நம்பிக்கையையும் வழங்கியிருக்கிறது. நாட்டின் சுபீட்சம் நமக்கெல்லாம் பெரு வெளிச்சமாகத் தெரிகிறது.
ஈழம் என்ற பெயரில் பிரபாகரன் நடத்திய கொடூரம் தமிழ் மக்களுக்கு என்றும் மறக்க முடியாத ரணமாகவே இருக்கும் என்றாலும் பயங்கரவாதம் துடைத் தெறியப்பட்டுள்ளதென்ற செய்தி தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, சகல மக்களுக்கும் புத்துயிர் பெறுவதாகவே இருக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply