கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்குச் செல்லும் வாகனங்கள் வவுனியாவில் சோதனை

வன்னிப் பிரதேசத்தின் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதி;களுக்குள் செல்லும் சகல வாகனங்களையும் வவுனியாவில் வைத்து சோதனையிடுவதற்கான புதிய நடைமுறையொன்று விரைவில் அமுலுக்கு வரவுள்ளது.

இதுவரை காலமும் குறிப்பிட்ட பிரதேசங்களுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும்; ஓமந்தைச் சோதனைச் சாவடியில் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இங்கு ஏற்படக் கூடிய காலதாமத்தைத் தவிர்க்கும் வகையிலேயே இந்தப் புதிய திட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியாவில் சோதனை மேற்கொள்வதற்கு வசதியாக வவுனியா புகையிரத நிலையத்துக்கருகிலுள்ள அரசாங்க உணவுப் பண்டசாலைக்குச் சொந்தமான இடம் தெரிவு செய்யப்படடுள்ளது.

இங்கு இராணுவத்தினரும் பொலிசாரும் சோதனையிட்ட பின்னர் அனைத்து வாகனங்களும் இராணுவ பாதுகாப்புடன் ஓமந்தை வரை கொண்டு செல்லப்படும்.

இந்தப் புதிய நடைமுறை மூலம் கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்ட பொருட்களைக் கள்ளத்தனமாக கொண்டு செல்வதும் தவிர்க்கப்படுமெனவும் படைதரப்பு தெரிவித்தது.

இதேவேளை, கடந்த இரு தினங்களாக மூடப்பட்டிருந்த ஓமந்தைச் சோதனைச் சாவடி இன்று காலை மணிக்குத் திறக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. தினமும் காலை 10.00 மணியிலிருந்து பகல் 2.00 மணி வரையான நான்கு மணித்தியாலங்களே இது திறந்திருக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply