பிரபாகரன்-பொட்டம்மான்-சூசை தப்பிச்செல்ல எடுத்த இறுதி முயற்சி தோல்வி

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து இன்று (மே 18) காலை பிரபாகரன், பொட்டம்மான் மற்றும் சூசை ஆகியோர் அம்புலன்ஸ் வாகனங்களில் மோதல் பகுதியில் இருந்து கரையாமுள்ளி வாய்க்கால் நோக்கி தப்பிச்செல்ல முயன்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களின் முயற்சி படையினரால் தோற்கடிப்பட்டதாகவும் அந்த மோதலில் பிரபாகரன் பொட்டம்மான் கொல்லப்பட்டதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை முழுவதும் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கும் நடவடிக்கை முடிவடைந்திருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா அரசாங்கத் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவரும், அவருக்கு நெருக்கமான முக்கிய தலைவர்களும் வாகனம் மூலம் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தப்பிச்சென்ற வாகனம் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற முற்பட்டபோதும், இராணுவத்தினர் அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவ்வாகனம் தீப்பிடித்ததாக ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார். (corrected & updated)

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply